"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
x
பீகார் உள்பட நாடு முழுவதும், விவசாயிகள் முற்றிலும் அழிக்கப்படுவதாகவும், இளைஞர்கள் வேலையின்றி வாடுவதாகவும் தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் ஆட்சியில், பீகாரில் உள்ள ஏழை மக்கள் கல்வி, வேலை மற்றும் மருத்துவ உதவிக்காக புலம் பெயர்ந்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார். நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். பணவீக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், வெங்காய மாலை அணிந்து பா.ஜ.க.வினர் உலா வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்