இந்தியா, அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை - பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

இந்தியா அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்தியா, அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை - பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்
x
இந்தியா, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வரும் 29ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி இந்தியா புறப்பட்ட அவர் டெல்லியில் நடைபெறும் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கூட்டத்தில் நாளை பங்கேற்கிறார். அவருடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் வருகிறார். சீனாவின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விஷயங்கள் குறித்து  மைக்கேல் பாம்பியோ ஆலோசிக்க உள்ளார். வருகிற நவம்பர் 3-ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்