குஜராத்திற்கு, 3 திட்டங்கள் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சோலார் மின் உற்பத்தி, விநியோகத்தில் இந்தியா முன்னணி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.
குஜராத்திற்கு, 3 திட்டங்கள் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
x
குஜராத் விவசாயிகளுக்கான, நீர்ப்பாசனத்திற்கு கிசான் சூர்யோதய் உள்ளிட்ட மூன்று முக்கிய திட்டங்களை டெல்லியில் இருந்த படி காணொலி மூலம், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். பின்னர், உரையாற்றிய அவர், உலகிலேயே சோலார் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். 
பகலில் நீர்ப்பாசனத்திற்கு மின்சாரம் வழங்குவதே கிசான் சூர்யோதய் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தவிர,  சுற்றுலாவுக்காக கிர்னாரில் ரோப் கார் திட்டத்தையும் பிரதமர் மோதி துவக்கி வைத்தார்.மூன்றாவதாக  யு.என். மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடைய குழந்தை இருதய மருத்துவமனையையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்