மூன்றாம் காலாண்டில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை - 26.1 சதவீதம் பங்குகளுடன் ஜியோமி முதலிடம்

இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை -  26.1 சதவீதம் பங்குகளுடன் ஜியோமி முதலிடம்
x
செப்டம்பரில் முடிவடைந்த நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்தியாவில் 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக கானலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இது 8 சதவீதம் கூடுதல் ஆகும். ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி நிறுவனம் 1 கோடியே 34 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து, 26.1 சதவீதம் பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வரிசையில் அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் 20.4 சதவீதமும், விவோ நிறுவனம் 17.6 சதவீதமும் பெற்றுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்