14 வயதில் பலாத்கார காட்சியில் நடித்த நடிகை - இளம் நடிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் மலையாள நடிகைகள்

2013ல் வெளியான மலையாள படம் ஒன்றின் எடிட் செய்யப்படாத பலாத்கார காட்சிகள் ஆபாச இணையதளத்தில் வெளியான விரக்தியில் இளம் நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
14 வயதில் பலாத்கார காட்சியில் நடித்த நடிகை - இளம் நடிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் மலையாள நடிகைகள்
x
2013 ஆம் ஆண்டு இயக்குநர் சதீஷ் அனந்தபுரி இயக்கத்தில் வெளியான படம் For Sale. மலையாள பட உலகில் பிரபல நடிகர்களான முகேஷ், சாய் குமார், காதல் சந்தியா உட்பட பலரும் நடித்த படம் இது. 

இந்த படத்தில் காதல் சந்தியாவின் தங்கையாக நடித்தவர் சோனா ஆபிரகாம். அப்போது 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இவர், படத்தின் பலாத்கார காட்சி ஒன்றில் நடித்தார். இப்படி ஒரு காட்சி இருப்பதை ஏற்கனவே தெரிவிக்காததால் சோனா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் இயக்குநர் இந்த காட்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சோனாவை கட்டாயப்படுத்தி காட்சியில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட பலாத்கார காட்சிகள் எடிட் செய்யப்பட்டு படமும் வெளியானது. 

ஆனால் படம் வெளியாகி பல வருடங்கள் ஆன பிறகு, எடிட் செய்யப்படாத பலாத்காரம் தொடர்பான காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல் சோனாவுக்கு கிடைக்கவே, அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் பல முறை புகார் அளித்துள்ளார். 

ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது சட்டம் படித்து வரும் சோனா ஆபிரகாம், பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் வெளியான வீடியோவை தடுத்து நிறுத்த முடியாத சூழல். 

ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த அவர், திடீரென தற்கொலை முயற்சியை எடுத்துள்ளார். ஆனால் அவரின் பெற்றோர் அவரை காப்பாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றையும் சோனா வெளியிட்டுள்ளார். 

விவரம் தெரியாத வயதில் நடித்த அந்த காட்சியானது, இப்போது வெளியாகி உள்ளதால் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும், கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகூறியிருக்கிறார். 

மலையாள பட நடிகைகள் பலரும் சோனாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர். சினிமாவில் பெண்களை இதுபோன்று நடத்தும் செயலுக்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்