"விரைவில் கர்நாடகத்துக்கு புதிய முதல்வர்" - பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

அடுத்த முதல்வர் வட கர்நாடக பகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பசன்கவுடா பேசியதால் கர்நாடக பா.ஜ.க.வில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
விரைவில் கர்நாடகத்துக்கு புதிய முதல்வர் - பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
x
அடுத்த முதல்வர் வட கர்நாடக பகுதியில் இருந்து  தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பசன்கவுடா பேசியதால் கர்நாடக பா.ஜ.க.வில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. 
பா.ஜ.க.விற்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியது உத்தர கர்நாடக மாவட்டங்கள் தான் என்றும், கோலார்,ஹாசன், மண்டியா மாவட்டங்களில் கட்சிக்கு யாரும் வாக்குகள் செலுத்துவதில்லை என்றும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  உத்தர கர்நாடகா மாவட்டங்களில் இருந்து   95 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த முதல்வர் வட கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் என்றும், இதனை பிரதமர் மோடியே  ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், விரைவில் எடியூரப்பா பதவி பறிபோகும் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்