கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் - ரகுராம் ராஜன்

இந்தியா போன்ற வளரும் நாடுகள், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர, அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் - ரகுராம் ராஜன்
x
இந்தியா போன்ற வளரும் நாடுகள், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர, அரசின்  செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்று  இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜி-20 மாநாட்டில் பேசிய அவர், சிறு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மட்டுப்படுத்த, உடனடியான நிவாரண உதவிகள் அளிக்க மத்திய அரசு பெரிய அளவில் செலவு செய்யத் தயங்கக் கூடாது என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே பி.ஹெச்.டி. வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய மத்திய அரசின் பிரதான பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், உரிய நேரத்தில் ஒரு நிதித் தொகுப்பு மூலம் அரசு செலவு செய்யும் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்