2000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் - சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வழக்கை ஒப்படைக்க வாய்ப்பு

கேரளாவில் 2000 கோடி மோசடியில் ஈடுபட்ட நிதிநிறுவன வழக்கு சிபிஐ அல்லது அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் - சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வழக்கை ஒப்படைக்க வாய்ப்பு
x
கேரளாவில் உள்ள நிதி நிறுவனமான பாப்புலர் ஃபைனான்ஸ்,  வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புத்தொகை வாங்கி அதற்கு வட்டி கொடுத்து வருகிறது. மாநிலத்தில் 247 கிளைகளுடன் இயங்கி வந்த இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை அறிந்த வாடிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சுமார் 2000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதும் உறுதியானது. நிதி நிறுவன உரிமையாளர்களான தாமஸ் டேனியல் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வெளிநாடுகளிலும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது உறுதியானதால் இன்டர்போல் உதவியை நாடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்திய போலீசார் 3 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ அல்லது அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்