நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
x
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக ஆஷிஷ் மகேந்திரா தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலா கோக்கலே நீட் தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார். ஆனால் நீட் தேர்வு தொடர்பான ரிட் மனுக்களையும் மறு ஆய்வு மனுக்களையும் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதால் இந்த மனுவையும் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்