இந்திய விமானப்படையில் இணைகிறது ரபேல் - எல்லையில் பதற்றமான சூழலில் முக்கிய நிகழ்வு
பதிவு : செப்டம்பர் 10, 2020, 08:24 AM
ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன.
ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்,அவற்றில், 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன. இந்த விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி இந்திய விமான படையில் இணைக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி , முப்படை தளபதிகள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்குப்பின் பிரான்ஸ் அமைச்சருடன், ராஜ்நாத் சிங் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். எல்லையில் சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்த‌தாக கருதப்படுகிறது. 

மீன்வளம், கால்நடை - சிறப்பு திட்டம்

மீன்வளத்துறைக்காக, மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை இன்றைய தினம் பிரதமர் மோடி டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொடங்கி வைக்கிறார். 2020 முதல் 5 ஆண்டு காலத்திற்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோல கால்நடை பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இ-கோபாலா என்ற செயலியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

செப்.12 முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள்

செப்டம்பர் 12-ம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம்  அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து டெல்லிக்கு தினசரி ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த கூடுதல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மறுதேர்வு நடக்குமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சிபிஎஸ்இ மறுத்தேர்வு நடத்தும் விவகாரம் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த‌து. இதனை ரத்து செய்ய கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  7 ஆம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டு,  இன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்த‌னர். 

இஎம்ஐ - வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

வங்கி கடன் இஎம்ஐ செலுத்தப்படும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த மூன்றாம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆகஸ்ட் 31 வரை கடன் தொகை செலுத்தாதவர்களின் கணக்கை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5371 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2375 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

345 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

281 views

பிற செய்திகள்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் - லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டம்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதை தடுக்க, தேவைப்பட்டால் அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

9 views

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

164 views

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

41 views

"புதிய கல்வி கொள்கை அமலால் இந்தியாவின் பழம்பெருமை திரும்பும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

நவீன கல்வி முறையில் இந்தியாவின் உயர் கல்வி நிலையங்களால் உயர்ந்த நிலையை எட்ட முடியவில்லை என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

53 views

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

84 views

கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

582 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.