ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி - 2வது கட்ட மனித பரிசோதனை இந்தியாவில் தொடக்கம்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பு ஊசி மருந்தின் பரிசோதனையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி - 2வது கட்ட மனித பரிசோதனை இந்தியாவில் தொடக்கம்
x
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்தின் இரண்டாவது கட்ட மனித சோதனை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம் நிறுவனம், ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு மருந்தை தயாரிக்க உள்ளது. நாட்டில் உள்ள 17 நகரங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்தியாவில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், இந்த சோதனையில் பங்கேற்க விருப்பம் உள்ள தன்னார்வலர்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது. விருப்பமுள்ள  தன்னார்வலர்கள் தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு அதற்கான தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்