ஐதராபாத்துக்கு ஹவாலா பணம் கடத்தல் - ரூ.1.47 கோடி பறிமுதல்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்துக்கு, ஹவாலா பணம் கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்துக்கு ஹவாலா பணம் கடத்தல் - ரூ.1.47 கோடி பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்துக்கு, ஹவாலா பணம் கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இது குறித்து விஜயவாடாவில், செய்தியாளர்களிடம் பேசிய விஜயவாடா காவல்துறை ஆணையர் சீனிவாஸ், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதாக கூறியுள்ளார். அப்போது ஒரு காரின் பின்புறத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை சோதனை செய்த போது, அதில் 1.47 கோடி பணம், 34 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அதனை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக, 
பிரவீன், சிவானந்தம், ஆனந்த்ராவ், ஹரிபாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்