கேரளாவில் மோசடியில் ஈடுபட்ட பிரபல நிதிநிறுவனம் - ரூ.2000 கோடி வரை மோசடி

கேரளால் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கேரளாவில் மோசடியில் ஈடுபட்ட பிரபல நிதிநிறுவனம் - ரூ.2000 கோடி வரை மோசடி
x
கேரளாவில் மட்டும் 247 கிளைகளுடன் பிரபல நிதி நிறுவனமான பாப்புலர் ஃபைனான்ஸ் இயங்கி வந்தது. வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புத்தொகை வாங்கி அதற்கு வட்டி கொடுத்து வந்த இந்த நிதி நிறுவனம், திடீரென தன் கிளைகளை மூடியது. இதனால் பணம் முதலீடு செய்திருநத் மக்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுவரை 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக உறுதியான நிலையில் நிதி நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வாகாயரில் உள்ள இவர்களின் வீட்டில் போலிசார் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்