கற்றல் என்பது வாழ்க்கை முழுவதும் தொடர்வது - பிரதமர் நரேந்திர மோடி

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில், பத்திரிகா குழுமம் கட்டியுள்ள அடையாள நுழைவு வாயிலை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கற்றல் என்பது வாழ்க்கை முழுவதும் தொடர்வது - பிரதமர் நரேந்திர மோடி
x
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில், பத்திரிகா குழுமம் கட்டியுள்ள அடையாள நுழைவு வாயிலை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பத்திரிகா குழுமத்தின் தலைவர் எழுதிய 2  புத்தகங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதலமைச்சர் அசோக் கெலோட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி படிப்பு என்பது முடிந்து விட்டாலும் கூட, கற்றல் என்பது நமது வாழ்க்கை முழுவதும் நம்முடன் தொடர்ந்து வரக்கூடியது என தெரிவித்தார். இதில் புத்தகங்களும் எழுத்தாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் எனவும் பிரதமர் மோடி  தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்