"நிலவில் பூமியின் வளிமண்டல பாதிப்பின் சாத்தியங்கள் இருக்கின்றன" - விஞ்ஞானிகள் மற்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

சந்திராயன்-1 அனுப்பி வைத்த படங்கள் நிலவில் பூமியின் வளிமண்டல பாதிப்பின் சாத்தியத்தைக் குறிப்பதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நிலவில் பூமியின் வளிமண்டல பாதிப்பின் சாத்தியங்கள் இருக்கின்றன - விஞ்ஞானிகள் மற்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
x
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி திட்டமான சந்திராயன்-1 அனுப்பியுள்ள படங்கள் மூலம், நிலவின் துருவங்களில் 'துரு' பிடித்திருக்கலாம் என்று தெரியவந்திருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். நிலவின் மேற்பரப்பில் இரும்பு பாறைகள் இருந்தாலும், துரு பிடிப்பதற்குத் தேவையான தண்ணீரும், பிராணவாயுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திராயன்-3 திட்டத்தை பொருத்தவரையில், 2021-இன் தொடக்கத்தில் ஏவப்படலாம் என்றும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யானுக்கான தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்