ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாட்டுக்குத் தடை - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து, அமைச்சரவையிலும் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாட்டுக்குத் தடை - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
x
ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து, அமைச்சரவையிலும் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் ஆன்லைன், ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டின் காரணமாக பல்வேறு இளைஞர்கள், பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து விவாதிக்கப்பட்டது. இதை தடுக்க ஆன்லைன் ரம்மி விளையாட தடை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி ஆன்லைன் வாயிலாக ரம்மி நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்