நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் புதிய திட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைப்பு

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது.
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் புதிய திட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைப்பு
x
நேர்மையாக வரி செலுத்துவர்களை கெளரவிக்கும் புதிய திட்டத்தை டெல்லியில், காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், ஆன்லைன் மூலம் அனைத்து கணக்குகளையும் தாக்கல் செய்ய வகை  செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்சியாக பல்வேறு செலவுகளுக்கு வருமான வரி கணக்கு  காட்டும் உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயத்துள்ளது. இது வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் வகை செய்யும். மேலும் நாம் செலவுகளை செய்யும் போது, நாம் யாரிடம் பணம் செலுத்துகிறோமோ அந்த நிறுவனமே அந்த தகவல்களை, வருமானவரித்துறையிடம் சமர்ப்பிக்கும். 
20 ஆயிரம் ரூபாய்க்கும், அதிகமான ஹோட்டல் கட்டணங்கள், மருத்துவ காப்பீடு பிரிமியங்கள் செலுத்துவது, 50 ஆயிரத்திற்கும் அதிகமாக ஆயுள் காப்பீட்டு பிரிமியம் தொகை, ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிக்கட்டணம், நன்கொடைகள் செலுத்துவது என்பது உள்ளிட்ட செலவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனமே, வருமானவரித்துறையிடம் சமர்ப்பிக்கும்.

Next Story

மேலும் செய்திகள்