இன்று இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின சிறப்பு உரை
பதிவு : ஆகஸ்ட் 14, 2020, 09:50 AM
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார்.
நாடு முழுவதும் நாளை 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று அபாயம் காரணமாக சுதந்திர தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  குடியரசுத் தலைவர் மாளிகையில் வழக்கமாக அளிக்கப்படும் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 
சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். முதலாவதாக இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் அவரது உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.