ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - 3 பேர் கைது

தெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை கொடுத்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் விடுதி நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - 3 பேர் கைது
x
தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அமீன்பூர் பகுதியில் ஆதரவற்றோருக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான சிறுவர், சிறுமிகள் உள்ள நிலையில், இதனை விஜயா என்ற  பெண் நிர்வகித்து வந்துள்ளார். இந்த விடுதிக்கு வந்த வேணுகோபால் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து அங்கிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்முறை செய்ததில் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி நிர்வாகியான விஜயா, வேணுகோபால் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்