சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவை வெளியிடும் விவகாரம் - விசாரணைக்கு இடைக்கால தடை

இ.ஐ.ஏ. அறிவிக்கையை 22 மொழிகளில் வெளியிடாதது குறித்து விளக்கம் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவை வெளியிடும் விவகாரம் - விசாரணைக்கு இடைக்கால தடை
x
இ.ஐ.ஏ. அறிவிக்கையை 22 மொழிகளில் வெளியிடாதது குறித்து விளக்கம் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்திய அரசின் சுற்றுச் சூழல், வனம், பருவ மாற்றம் உள்ளிட்ட அமைச்சக இணைய தளங்களில் இ.ஐ.ஏ. அறிக்கையை வெளியிடாதது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்டு 17ஆம் தேதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அரசின் ஆவணங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிட வகை செய்யும் அலுவல் மொழி விதிகளை திருத்துமாறும் மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்