உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது எப்போது? - நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் ஆலோசனை

உச்சநீதிமன்றத்தில் நேரடியாக, வழக்கு விசாரணை மேற்கொள்வது தொடர்பாக நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது எப்போது? - நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் ஆலோசனை
x
உச்சநீதிமன்றத்தில் நேரடியாக, வழக்கு விசாரணை மேற்கொள்வது தொடர்பாக நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து வருகிறது. 

இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க தலைவர் சிவாஜி.எம். ஜாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட குழு நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக கூறியுள்ளார்.  அடுத்த வாரம் முதல் இரண்டு அல்லது மூன்று நீதிமன்ற அறைகளில் இந்த நேரடி விசாரணையை தொடங்க தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்குவது தொடர்பாக நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான குழு ஓரிரு நாட்களில் முடிவெடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் துஷ்யந்த் தவே குழு சார்பில், வெளியிட்டுள்ள அறிக்கையில், காணொலி விசாரணையையும், இணையதளம் வாயிலாக வழக்குத் தாக்கல் செய்யும் முறையையும் மேம்படுத்தாமல், முழுவதுமாக நேரடி விசாரணையை தொடங்குவது கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடும் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்