24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு தொற்று உறுதி - குணமடைவோர் எண்ணிக்கை 69.80% ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணடைவோர் 69.80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு தொற்று உறுதி - குணமடைவோர் எண்ணிக்கை 69.80% ஆக அதிகரிப்பு
x
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 68 ஆயிரத்து 675 ஆக உயர்ந்து உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும்,  இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரத்து 489 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும்,  இதுவரை 45 ஆயிரத்து 257 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார்  6 லட்சத்து 39 ஆயிர​த்து  929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 53 ஆயிரத்து 601 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 47 ஆயிரத்து 746 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.நேற்று மட்டும்  871 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். நாட்டில் குணமடைவோர் சதவீதம் 69.80 ஆகவும், உயிரிழப்போர் சதவீதம் 1.99 ஆகவும் உள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 81 ஆயிரத்து 848 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 6 லட்சத்து 98 ஆயிரத்து 290 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்