புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
x
கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.  புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு- இன்று முதல் தளர்வுகள்

கொரோனா ஊரடங்கில் இன்று முதல் சில புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்தலாம் என கூறப்பட்டுள்ளது.  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை வழங்கலாம் எனவும் செய்தி குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

 காய்கறி, மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது ஆண்டு வருமானம்10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்களில் மட்டும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று  கொண்டாட்டம் இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாக போற்றப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இஸ்லாமியர்கள் விலங்குகளை குர்பானி பலி கொடுத்து நண்பர்ளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர். ஆண்டு தோறும் ஒட்டகங்களை பலியிட்டு கூட்டாக குர்பானி கொடுக்கப்படும் நிலையில், நடப்பு ஆண்டில் கொரோனா முன்னெச்சரிக்கையாக கூட்டு குர்பானிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்