30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்

கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சுங்கத்துறையினர், அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்
x
கேரளாவில் 30 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா தலைமறைவாக உள்ள நிலையில், அதில் பாஜகவை சேர்ந்த சந்திப் நாயர் என்பவருக்கும் முக்கிய பங்கு உள்ளதாக  சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத்துக்கு கொரோனா இல்லை என முடிவு வந்ததையடுத்து, அவரை  நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்திய சுங்கத்துறையினர் 7 நாள் காவலில் எடுத்தனர். இதனிடையே இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்