"பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதில் எந்த நோக்கமும் இல்லை" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்து

குழந்தைகளின் கல்வியில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்து தெரிவித்துள்ளார்.
x
குழந்தைகளின் கல்வியில், அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், கல்வி என்பது நமது குழந்தைகளுக்கான புனிதமான பணி என்றும், தயவு செய்து இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை கை விட வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார். நமது அரசியலில் அதிக கல்வியினை புகுத்துவோம் என்றும், உயிரியல், வேதியியல், இயற்பியல் என ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும் முக்கியமான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய பாடங்கள் நீக்கப்பட்டது இந்த பெரும் தொற்று காலத்தில் ஒரே ஒரு முறை எடுக்கப்பட்ட முடிவு தான் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பாடத்திட்டத்தை 30% குறைப்பதன் மூலம் மாணவர்கள் மீதான மன அழுத்தத்தை தளர்த்த முடியும் என்றும் அது தான் அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பின்பற்றி,  கல்வியாளர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்