ஜம்மு, காஷ்மீரில் கட்டப்பட்ட 6 புதிய பாலங்கள் - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எல்லை சாலை அமைப்பு நிறுவனம், ரூ.42 கோடி செலவில் கட்டி முடித்துள்ள 6 புதிய பாலங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஜம்மு, காஷ்மீரில் கட்டப்பட்ட 6 புதிய பாலங்கள் - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எல்லை சாலை அமைப்பு நிறுவனம், ரூ.42 கோடி செலவில் கட்டி முடித்துள்ள 6 புதிய பாலங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த பாலங்களை, பாதுகாப்புத் துறை அமைச்சர் திறந்து வைத்தார். 

"நாம் கனவு காணும் இந்தியா இது தானா?" - காங்.முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி


உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் சுரங்கங்களில் சிறுமிகள் பாலியல், வன்கொடுமைக்கு உள்ளான விவகாரம் குறித்து, நாம் கனவு காணும் இந்தியா இது தானா? என, ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், திட்டமிடப்படாத பொது முடக்கத்தால், பசியால் வாடும் குடும்பங்கள், சித்ரகூட் சுரங்கங்களில் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகள், உயிர் பிழைக்க பெரும் விலையை தந்துள்ளதாக குறிப்பிட்டார். நாம் கனவு காணும் இந்தியா இது தானா? என்றும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

"அச்சமற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இந்திரா, ராஜீவ் காந்தி" - .சிதம்பரம்


இந்திரா  மற்றும் ராஜீவ் காந்தி அச்சமற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர் என்றும், கண்களில் அச்சமின்றி மரணத்தை எதிர்கொண்டனர் என்றும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். மேலும், வாழ்க்கையை அச்சமில்லாமல் வாழ எங்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுத்தனர் என்றும், அந்த வழியில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையையும் நாங்கள் அப்படி தான் எதிர்கொள்வோம் எனவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

அனுமதி இன்றி திறக்கப்பட்ட குவாரிக்கு சீல் - நோட்டீஸ் அனுப்பி வருவாய்த்துறை நடவடிக்கை


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், அனுமதி சான்றுகள் இன்றி திறக்கப்பட்ட குவாரிக்கு, வருவாய்துறையினர் சீல் வைத்தனர். ராஜபாறையில் குவாரி திறப்பு விழாவை ஒட்டி ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 48 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, 33 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், உரிய அனுமதி சான்றுகள் இன்றி திறக்கப்பட்ட குவாரியை மூடி சீல் வைத்ததோடு, உரிமையாளர் ரோயி குரியனுக்கு  வருவாய்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

டெல்லியில் அதிகாலையில் தீ விபத்து - தீயை அணைக்கும் பணி தீவிரம்


டெல்லி முண்டக்கா பகுதியில் உள்ள கிடங்கில் அதிகாலை ஏற்பட்ட தீ, மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், 35 வாகனங்களில் அங்கு சென்று 6 மணி நேரத்திற்கும் மேலாக தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், அந்த கிட​ங்கில் மருத்துவ மற்றும் மின்னணு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக மண்டல தீயணைப்புத் துறை அலுவலர் எஸ்.கே. துவா தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவில் பொக்லைன் ஓட்டுநர் மீது தாக்குதல் - போலீசார் முன் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

கர்நாடகாவில் பொக்லைன் இயந்திரம் ஓட்டுநர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினம் பகுதியில்  பொதுப் பணித்துறை சார்பில் மைசூரு- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரிவாக்கப் பணியின் போது. அப்பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தத்தை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முறையான அனுமதி பெற்று  பேருந்து நிறுத்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் பேருந்து நிறுத்தத்தை அப்புறப்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் ஓட்டுனர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தனைக்கும் முறையான அனுமதியுடன் நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணியின் போது, போலீசார் முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுப்பு - சாலையிலேயே உயிரை விட்ட நபரால் பரபரப்பு 


தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாலையில் மயங்கி விழுந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் நலக்குறைவை தொடர்ந்து அவரது உறவினர்கள், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அந்த மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்க மறுத்த நிலையில், இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. 

10-வகுப்பு பொதுத் தேர்வில் 68% மதிப்பெண்பெற்ற மாணவி - வீடு வழங்கி மேன்மைபடுத்திய இந்தூர் மாநகராட்சி


மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பாரதிகண்டேகர் என்ற 10 வகுப்பு மாணவி, பொதுத் தேர்வில் 68 சதவீத மதிப்பெண்கள் பெற்றதை பாராட்டி, நகராட்சி நிர்வாகம் சார்பில் அவருக்கு, அரசு குடியிருப்பில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டு உள்ளது. சாதாரண தொழிலாளிக்கு பிறந்த அந்த மாணவி, சாலையோர நடைபாதையில் பெற்றோருடன் வசித்து வந்த நிலையிலும், கஷ்டப்பட்டு படித்து இந்த அளவுக்கு மதிப்பெண் எடுத்ததை கவுரவிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

மனஅழுத்தத்தை போக்க பெண் மருத்துவர் நடனம் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ


பரவி வரும், கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்நிலையில் இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, பெண் மருத்துவர் ரிச்சா நேகி என்பவர், பாதுகாப்பு கவச உடையுடன், நடனமாடி பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

துணியாலான ஓவிய முக கவசம் - ஓவியரின் முயற்சிக்கு வரவேற்பு


பீகார் மாநிலம் மதுபானி நகரைச் சேர்ந்த ஓவியர் ஒருவர், ஓவியத்துடன் கூடிய துணியால் ஆன முக கவசத்தை தயாரித்து வருகிறார். மூன்று முக கவசங்கள் விலை 50 ரூபாய். சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவிவருகிறது. இதனை பார்த்த தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓவியத்துடன் கூடிய முகக் கவசத்தை வாங்க இருப்பதாக அதில் தெரிவித்துள்ளார். கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த முக கவசம் இருப்பதாக ஆனந்த் மகேந்திரா குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்