டெல்லியில் மேலும் 2033 பேருக்கு கொரோனா - 24 மணி நேரத்தில் 48 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்தில் 33 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் மேலும் 2033 பேருக்கு கொரோனா - 24 மணி நேரத்தில் 48 பேர் பலி
x
டெல்லியில்  கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்தில் 33 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தி 4 ஆயிரத்தி 864 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஓரேநாளில் மூவாயிரத்தி 982 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

"கேரளாவில் மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு" - சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல்


கேரளாவில் மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளதாக கூறினார். இதுவரை 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 2 ஆயிரத்து 605 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராணுவ வீரர்கள் 89 செயலிகளை பயன்படுத்த தடை


பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஹங்காமா, டிண்டர், ட்ரூ காலர் உள்ளிட்ட செயலிகளை இந்திய ராணுவத்தினர் பயன்படுத்த தடை செய்யப்படும் பட்டியலில் உள்ளன. தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், புலனாய்வு அமைப்புகளுக்கு ஆபத்து உள்ளிட்ட காரணங்களாக் தடை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 14 செய்தி தளங்கள், 4 வீடியோ தளங்கள், கருத்துகளை பகிரும் 3 செயலிகள், பப்ஜி உள்ளிட்ட 5 விளையாட்டு செயலிகள் உள்ளன. ஜூலை 15 ஆம் தேதிக்குள் அந்த  செயலிகளை நீக்காத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ராணுவத்தினர் பயன்படுத்தக்கூடாது என்றால் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அவை உகந்தவை அல்ல என்றுதானே பொருள்? என்றும், ஃபேஸ்புக், ஸூம், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளுக்கு தடை வரப்போகிறதா? எனவும் விழுப்புரம் எம்பி,. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தல் விவகாரம் - "பாஜகவை சேர்ந்த சந்திப் நாயருக்கு தொடர்பு"


தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா தலைமறைவாக உள்ள நிலையில், அவரது வீட்டில், அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை நடத்தி, பல்வேறு ஆவனங்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சரத் என்பவரை, கைது செய்துள்ள சுங்கத்துறையினர்,  அவரை  7 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சரத்திற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், முடிவு வந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணைக்கு எடுக்க உள்ளனர். இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயர் என்பவருக்கும் தங்க கடத்தலில் முக்கிய பங்கு உள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்திப் நாயரின் மனைவி செளமியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சந்திப் நாயர் பலமுறை வெளிநாடு சென்று வந்தது தெரியவந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்