கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி - 3 வது மாடியில் வசித்ததால், அழைத்து வர தயங்கிய ஊழியர்கள்...

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி மூன்றாவது மாடியில் இருந்ததால், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் , திரும்பி சென்றுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி - 3 வது மாடியில் வசித்ததால், அழைத்து வர தயங்கிய ஊழியர்கள்...
x
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  70 வயது மூதாட்டி மூன்றாவது மாடியில் இருந்ததால், சுகாதாரத்துறை  ஊழியர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் , திரும்பி சென்றுள்ளனர். அந்த நோயாளிக்கு வயது மூப்பு மற்றும் காலில் காயம் இருந்ததால் நடக்க முடியவில்லை என கூறப்படுகிறது.  சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அரசு சார்பில், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் வழங்கப்பட்டு இருந்தாலும், நோயாளியை அழைத்துச் செல்லாமல் திரும்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்