ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி - பாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம்

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம்.
ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி - பாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம்
x
ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும் என்ற  தீர்ப்பை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த பிப்ரவரி மாத தீர்ப்பில் தெரிவித்தபடி, ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்கும் முடிவு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக தெரிவித்தார். மேலும், கொரோனா காரணமாக அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும், 6 மாதம் அவகாசம் வேண்டும் என வாதிட்டார்.   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கட்டாயம் செயல்படுத்துவோம் என தெரிவித்த நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்