இந்திய - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தொடர்பாக 12 மணி நேரம் நீடித்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தை

இந்திய, சீன எல்லை​ பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக நேற்று ராணுவ படைப் பிரிவு லெப்டினட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை மூன்றாம் முறையாக நடைபெற்றது.
இந்திய - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தொடர்பாக 12 மணி நேரம் நீடித்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தை
x
இந்திய, சீன எல்லை​ பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக நேற்று ராணுவ படைப் பிரிவு லெப்டினட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை மூன்றாம் முறையாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு கிழக்கு லடாக்கில், சீன எல்லையில் உள்ள சுஷுலில் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 11 மணி வரை நீடித்துள்ளது. இதில்  கால்வான் பள்ளத்தாக்கு, பான்காங் டெசோ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் உடனடியாக துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மிக விரைவில் படைகள் திரும்பப் பெறுவது மற்றும்  எல்லையில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள செயல்திட்டம் வகுப்பது குறித்து இருதரப்பு விவாதித்ததாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்