ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சிக்கி தவிக்கும் லைபீரிய பெண் - மத்திய அரசு உதவி செய்ய கோரிக்கை

கேரளாவில் ஊரடங்கு காரணமாக சிக்கி தவிக்கும் லைபீரிய பெண் மற்றும் அவரது மகன் ஆகியோர் , தாங்கள் நாடு திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சிக்கி தவிக்கும் லைபீரிய பெண்  - மத்திய அரசு உதவி செய்ய கோரிக்கை
x
லைபீரியா நாட்டை சேர்ந்த ஜென்னே என்ற பெண், தனது இரண்டரை வயது மகன் ஜின்னுடன் மூன்று மாதங்களுக்கு முன் கொச்சி வந்துள்ளார். இதய நோயால் பாதிக்கப்பட்ட ஜின்னுக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மார்ச்  12ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் கொரோனா ஊரடங்கால் விமான சேவைகள்  ரத்து செய்யப்பட்ட நிலையில் , ஜென்னே மற்றும் அவரது மகன் இருவரும் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தங்க மருத்துவமனை அதிகாரிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜின்னே, தாங்கள் லைபீரியா திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்