டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்பு

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.
x
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்யாததற்கான தாமத கட்டணம் ரத்துசெய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியவர்களுக்கான தாமதக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் செலுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு மாநில அரசுகளும், நிலுவையில் உள்ள இழப்பீட்டை வழங்குவது தொடர்பான கோரிக்கையை கூட்டத்தில் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்