சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சபரிமலை நடை வருகின்ற 14ம் தேதி திறக்கப்பட்டு மாதாந்திர மற்றும் உற்சவ பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
x
சபரிமலை நடை வருகின்ற 14ம் தேதி திறக்கப்பட்டு மாதாந்திர மற்றும் உற்சவ பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம் போர்டு அறிவித்திருந்த நிலையில், திடீரென்று  ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாமென முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள அறநிலைத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்