சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த குரங்கு - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

கர்நாடகாவில் , காயமடைந்த குரங்கு ஒன்று சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த ருசிகர சம்பவம் ஆனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த குரங்கு - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ
x
கார்வார் மாவட்டத்தின் தண்டேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை வாயிலில் குரங்கு ஒன்று நீண்ட நேரமாக அமர்ந்து இருந்தது. குரங்கு தொடர்ச்சியாக உடலின் ஒரு பகுதியை கோதிக் கொண்டே இருந்ததை கண்ட செலிவியர்கள் அதனை பரிசோதித்தனர். அப்போது குரங்கிற்கு காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. காயம்பட்ட இடத்தில் செவிலியர்கள் கட்டுப்போடும் வரை குரங்கு அமைதியாக இருந்தது. அதன் பின் குரங்கு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தனது காயத்திற்கு சிகிச்சை பெறவே அந்த குரங்கு மருத்துவமனை வந்துள்ளது என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர். குரங்கு சிகிச்சை பெறும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்