நீரவ் மோடியின் ரூ.1,350 கோடி சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு, லண்டன் தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஆயிரத்து 400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
நீரவ் மோடியின் ரூ.1,350 கோடி சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
x
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டு, லண்டன் தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஆயிரத்து 400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. லண்டனில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கை  சந்தித்து வருகிறார். இந்த நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றம் நீரவ் மோடியின்  சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து ஹாங்காங்கில் இருந்து, நீரவ் மோடிக்கு சொந்தமான ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வைரங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து இந்தியா கொண்டு வந்துள்ளது.  சுமார் 2 ஆயிரத்து 300 கிலோ தங்கத்தினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்