நீரிழிவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு - பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீரிழிவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு - பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
x
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு கடந்த 4 ஆம் தேதி முதல் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இறந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எந்த மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படுவார் என்பதை  மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தான்  முடிவு செய்யும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்