சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய கோரி மனு - உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அமித்பத்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையிலும், எஞ்சியுள்ள பாடங்களுக்கான மதிப்பெண்கள், அகநிலை மதிப்பீடு மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story