பல நாடுகளில் உணவு பஞ்சதை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள் - இந்தியாவிலும் தொடங்கியது ஆட்டம்

ஆப்பிரிக்க நாடுகளை கடுமையான உணவு பஞ்சத்தில் தள்ளியுள்ள வெட்டுக்கிளிகள், இந்தியாவையும் சூறையாட தொடங்கியுள்ளதால், நம் நாட்டிலும் உணவுப்பஞ்சமும் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது....
பல நாடுகளில் உணவு பஞ்சதை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள் - இந்தியாவிலும் தொடங்கியது ஆட்டம்
x
* விளைநிலங்களை சேதப்படுத்தும் அத்தனை பெரிய யானைகளையும், காட்டு விலங்குகளையும் எளிதாக விரட்டும் பல நாடுகள், இன்று வெறும் வெட்டுக்கிளிகளை விரட்ட முடியாமல் தவிக்கின்றன... 

* பருவ நிலை மாற்றத்தால் நிறத்திலும், உருவத்திலும் மாற்றமடையும் வெட்டுக்கிளிகள், கோடிக்கணக்கில் இணைந்து கூட்டம் கூட்டமாக சேர்ந்து விளை நிலங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சேத‌த்தை ஏற்படுத்துகின்றன. இதனை Locust swarms அட்டாக்  என கூறுகின்றனர். 

* இந்த முறையோ, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் கூட்டமாக ஒன்று சேர்ந்துள்ளன. இந்த வெட்டுக்கிளிகளை ஏப்ரல் மாத‌த்திற்குள் அழித்து விடுங்கள்... 

* இல்லையென்றால், பெரும் சேத‌த்தை சந்திக்க நேரிடும் என பிப்ரவரியிலே எச்சரித்திருந்த‌து ஐ.நா....  

* ஐ.நா எச்சரித்த‌து போலவே தங்கள் ஆட்டத்தை தொடங்கிய வெட்டுக்கிளிகள், சோமாலியா, கென்யா ,  உள்ளிட்ட நாடுகளில், லட்சக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்களை முழுமையாக அழித்து சென்றுவிட்டன.... 

* இதனால், அண்டை நாடுகளிடம் இருந்து உணவு பெற்று,  மக்களுக்கு விநியோகிக்கும் அளவு உணவுப்பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கின்றன பல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்...

* கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை தின்று தீர்த்த அந்த வெட்டுக்கிளிகள், அடுத்தாக பாகிஸ்தானையும் சூரையாடிவிட்டன..

* அடுத்தக்கட்டமாக இந்தியாவிற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களை அழிக்கதொடங்கி விட்டன. 

* வெப்பம் நிறைந்த பகுதிகளில் மட்டுமே இந்த வெட்டுக்கிளிகளால் பெருமளவு இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பதால், வழக்கமாக ராஜஸ்தான் வரை மட்டுமே இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு இருக்கும். 

* ஆனால், இந்த முறை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களின் விளை நிலங்களை முழுமையாக அழித்துகொண்டிருக்கின்றன ...

 * வானம் முழுவதும் வெட்டுக்கிளிகள் அங்குமிங்கும் பறந்து திரிவதால், மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். 

* அடுத் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் வட இந்திய மக்கள்.


Next Story

மேலும் செய்திகள்