நாட்டில் கடந்த ஒரு நாளில் 1,15,364 பேருக்கு கொரோனா சோதனை

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆறாயிரத்து 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
 * நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆறாயிரத்து 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 137 பேர் உயிரிழந்துள்ளனர். 

* தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 101 பேராக உயர்ந்துள்ளது.  

* இதில் 65 ஆயிரத்து 597 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 51 ஆயிரத்து 784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

* இதுவரை மூவாயிரத்து 720 பேர் உயிரிழந்து உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக இரண்டாயிரத்து 940 பேருக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 784 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

* மகாராஷ்டிராவில் 44 ஆயிரம் பேர், தமிழகத்தில் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் மற்றும் தமிழகம் முன்னணியில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

* கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் டெல்லி நான்காவது இடத்தில் உள்ளது. 

* கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதிதாக 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

* உலக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. 

* கடந்த மார்ச் மாதம் நாளொன்றுக்கு ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக சோதனை நடத்தும் நிலைக்கு நாடு முன்னேறி உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

* கொரோனா பரிசோதனையை பொறுத்த மட்டில் பத்து லட்சம் பேருக்கு இண்டாயிரம் பேருக்கு சோதனை நடைபெற்று வருகிறது. 

* இதுவரை நாட்டில் 28 லட்சத்து 34 ஆயிரத்து 798 பேருக்கு  சோதனை நடத்தப்பட்டு உள்ள நிலையில், 

* கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து15 ஆயிரத்து 364 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்