"நீட் நுழைவுத் தேர்வு ​ஜூலை 26- ம் தேதி நடைபெறும்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

வருகிற ஜூலை மாதம் 26-ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
x
எம்.பி.பி.எஸ்., மற்றும்,  பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும். நடப்பு கல்வி ஆண்டில் இந்த தேர்வு, மே 3 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நீட் நுழைவு தேர்வும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இணையதளம் வாயிலாக, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களிடம் நேரலையில் உரையாடினார். அப்போது, நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ., மெயின் தேர்வுகள் ஜூலை 18, 20, 21, 22, 23 தேதிகளில் நடைபெறும், என அறிவித்தார். ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்டில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜூலை 26ஆம் தேதி தேர்வு நடந்து முடிந்தால் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீ்ட் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்