ஆபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒப்பந்த ஊழியர்கள் - 1,300 பேர் முன்னறிவிப்பின்றி திடீரென பணி நீக்கம்?

ஆயிரத்து 300 ஒப்பந்த தொழிலாளர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணிநீக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒப்பந்த ஊழியர்கள் - 1,300 பேர் முன்னறிவிப்பின்றி திடீரென பணி நீக்கம்?
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 ஆயிரத்துக்கு அதிகமான தங்கும் அறைகள் உள்ளன. இந்த அறைகளை சுத்தம் செய்வது, பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு  பணிகளில்  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால், மார்ச் 20 முதல் திருமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கபடாததால், தற்போது வரை இங்குள்ள அறைகள் காலியாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தேவஸ்தனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திருமலையில் உள்ள பல்வேறு விடுதிகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், காலை திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள  தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீனிவாச தங்கும் விடுதிக்கு முன்பு ஆண்களும், பெண்களும் சாலையில் அமர்ந்து   போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கும் இந்த உத்தரவை, தேவஸ்தானம் திரும்பப் பெற வேண்டும் என  அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், ஆயிரத்து 300 ஒப்பந்த தொழிலாளர்களை திருப்ப​தி தேவஸ்தானம் பணி நீக்கம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. யாரையும் பணிநீக்கம் செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்