ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலுக்கு தடை கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

'ரேபிட் டெஸ்டிங் கிட்'-களை கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலுக்கு தடை கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கொரோனா தொற்றை கண்டறிய 37 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்-களை மத்திய  அரசும், 1 லட்சத்து 25 ஆயிரம் கிட்-களை தமிழக ஆர்டர் செய்தது. இந்நிலையில் இந்த கருவிகளை புனேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல், கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தியதாக கூறி, அந்த கருவிகளை கொள்முதல் செய்ய தடை விதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர், வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்ததால் ரேபிட் டெஸ்டிங் கிட்-களை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மனு மீதான விசாரணையின் போது, குறைபாடுடைய ரேபிட் டெஸ்டிங் கிட்-களை திரும்ப அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரேபிட் டெஸ்டிங் கிட்-கள் கொள்முதல் செய்த போது மருந்து பொருட்கள் சட்ட விதிகள் பின்பற்றப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்