ஊரடங்கு உத்தரவு - கார் விற்பனை 90 சதவீதம் வரை சரிவு
கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் இழப்பை கண்டுள்ளன. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
பொருளாதார தேக்க நிலை காரணமாக கடந்த ஆண்டு இறுதி முதல் வாகன விற்பனையில் வீழ்ச்சி தொடங்கியது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் பணியாளர்களின் வேலை நாட்களைக் குறைத்ததுடன், உற்பத்தியையும் குறைத்து வந்தன. இந்த நிலையில், மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் வாகன விற்பனையானது கடும் சரிவை கண்டுள்ளன. முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகியின் விற்பனை, 47 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 41 சதவீத விற்பனை சரிவை மார்ச் மாதத்தில் சந்தித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் விற்பனை 55 சதவீதம் குறைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 68 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 88 சதவீத சரிவை சந்தித்துள்ளது. அசோக் லேலண்டின் மார்ச் மாத விற்பனை, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் சரிந்துள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள், உற்பத்தி குறைத்துள்ள நிலையில், விற்பனைச் சரிவு வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

