"கேரளாவில் உள்ள தமிழக மக்கள் வெளியேற வேண்டாம்" - கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள மக்கள், ஏப்ரல் 14 ஆம்தேதி வரை கேரளாவிலேயே இருக்க வேண்டும் என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வலியுறுத்தி உள்ளார்.
கேரளாவில் உள்ள தமிழக மக்கள் வெளியேற வேண்டாம் - கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி வலியுறுத்தல்
x
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள மக்கள், ஏப்ரல் 14 ஆம்தேதி வரை கேரளாவிலேயே இருக்க வேண்டும் என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வலியுறுத்தி உள்ளார். பொள்ளாச்சி அருகே  நடுப்புணி சோதனைச் சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில எல்லையில் அத்தியாவசிய வாகனங்களை தூய்மை செய்து அனுப்புவது என இரு மாநில அரசுகளுடன் முடிவு செய்துள்ளன என தெரிவித்தார்.  கேரளாவுக்கு வந்து வேலைசெய்யும் தமிழக மக்களுக்கு  தேவையான அனைத்து உதவிகளும் கேரள அரசு ஏற்பாடு செய்யும் என்றும், வரும் 14 ஆம் தேதி வரை எங்கு இருக்கிறார்களோ அங்கேயே இருப்பதுதான் நல்லது என்றும் கிருஷ்ணன் குட்டி  தெரிவித்தார். அப்போது, தமிழக சட்டப்பேரவை துணைசபாநாயகர் பொள்ளாச்சி  ஜெயராமன் உடனிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்