"வங்கிகளில் கடன் வாங்கியோர் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம்"

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வங்கிகளில் கடன் வாங்கியோர், மாதத் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
x
கொரோனா பாதிப்பால் நாடே முடங்கியுள்ள நிலையில், பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறினார்.

பொருளாதார பின்னடைவை சரி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிகம் 5 புள்ளி 15லிருந்து நான்கு புள்ளி நான்கு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

வங்கிக்கான ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த அறிவிப்பால், தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.  

ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடனுக்கான வட்டிகள் குறையும். வங்களில் கடன் வாங்கியோர் மாதத் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக சக்கிகாந்த தாஸ் தெரிவித்தார். இன்று நள்ளிரவில் இருந்து 3 மாதங்களுக்கு தவணை கட்ட விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த 3 மாதத்தில் கட்ட வேண்டிய தவணைத்தொகை பின்னர் செலுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்