நித்தியானந்த ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்தமாக சுமார் ரூ.5000 கோடி வரை சொத்துக்கள் உள்ளதாக தகவல்
நித்தியானந்தா இன்று ஆஜராகவில்லை என்றால் அவரது 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நித்யானந்தா மீதான பாலியல் புகார் வழக்கு ராம்நகர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 45 வாய்தாகளில் நித்யானந்தா நேரில் ஆஜராகாத நிலையில், கர்நாடக போலீசிடம் நித்தியானந்தா மற்றும் அவரது ஆசிரம சொத்துப் பட்டியலை ராம்நகர் நீதிமன்றம் கேட்டுள்ளது. அடுத்த முறை வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக வில்லை எனில் நித்தியானந்தா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடக காவல்துறையினர், நித்தியானந்தாவின் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதகமான மதிப்புகொண்ட சொத்துப்பட்டியலை தயார் செய்து நீதிமன்றத்தில் கொடுத்துள்ளனர். இந்த சொத்துக்களை நித்தியானந்தா அவரது தாயார் பெயரில் எழுதி வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய விசாரணையில், நித்தியானந்தா ஆஜராகாத பட்சத்தில், நீதிமன்றம் அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
