நிர்பயா வழக்கு - 4 பேருக்கு திகார் சறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அதிகாலை ஐந்தரை மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
நிர்பயா வழக்கு - 4 பேருக்கு திகார் சறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
x
டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய முகேஷ் குமார், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது. இதனை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேருக்கும் திகார் சிறையில் இன்று அதிகாலை சரியாக ஐந்தரை மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது சிறைக்கு வெளியே ஏராளமானோர் திரண்டு தேசிய கொடிகளை ஏந்தி தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட்டனர். திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை.


Next Story

மேலும் செய்திகள்