குடியுரிமை திருத்த சட்டம் - மத்திய அரசு விளக்கம் : உச்சநீதிமன்றத்தில் 129 பக்கங்கள் அடங்கிய மனுத்தாக்கல்

குடியுரிமை திருத்த சட்டம் குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் - மத்திய அரசு விளக்கம் : உச்சநீதிமன்றத்தில் 129 பக்கங்கள் அடங்கிய மனுத்தாக்கல்
x
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக, மத்திய அரசு முதல் கட்ட பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 129 பக்கங்கள் அடங்கிய  மனுவில், குடியுரிமை திருத்த சட்டம் குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமக்களின் சட்டரீதியான,  ஜனநாயக ரீதியான, மதசார்பற்ற உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தனி அதிகாரத்தின் கீழ் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள மத சிறுபான்மையினரை வரையறுக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்