யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
x
யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், பல்வேறு நிறுவனங்களுக்கும் கடன் அளித்த வகையில், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரையும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்ஸெல் குழம தலைவர் சுரேஷ் சந்திரா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், இந்தியாபுல்ஸ் நிறுவனர் சமீர் கெலாட் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்