மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரையும் சந்தேகப்படும் நபர் எனக் குறிக்கமாட்டோம் - அமைச்சர் அமித்ஷா

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரையும் சந்தேகப்படும் நபர் எனக் குறிக்கமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரையும் சந்தேகப்படும் நபர் எனக் குறிக்கமாட்டோம் - அமைச்சர் அமித்ஷா
x
டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார். யாரையும் சந்தேகத்துக்கு உரிய நபர் என கணக்கெடுப்பின் போது குறிப்பிடமாட்டோம் என அவர் உறுதி தெரிவித்துள்ளார். எந்தவொரு ஆவணமும் கேட்கப்படாது என்றும், சில தகவல் அளிப்பது விருப்பம் சார்ந்தது என்றும் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் வந்த பின்னர் தான் வெறுப்பு பேச்சுகள் தொடங்கியதாகவும், யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்றும், குடியுரிமை வழங்க தான் இந்த சட்டம் என்றும் அமித்ஷா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்